தமிழ் சினிமா நட்சத்திரங்களில் டாட்டூ குத்துவதில் அதிக ஆர்வம் கொண்டவர் திரிஷா. இவர் மார்பு, கை மற்றும் தோளில் டாட்டூ குத்தியிருக்கிறார். தற்போது இந்த வரிசையில் ஓவியாவும் இணைந்திருக்கிறார். இவர் தனது வலது கையில் டாட்டூ ஒன்றை குத்தியிருக்கிறார்.
‘களவாணி’, ‘கலகலப்பு’, ‘ஹலோ நான் பேய் பேசுகிறேன்’ ஆகிய படங்கள் மூலம் பிரபலமான ஓவியா, தற்போது பாங்காக் நகருக்கு சுற்றுப்பயணமாக சென்றுள்ளார். அங்கு அவர் தன்னுடைய வலது கையில் மிகப்பெரிய டாட்டூ ஒன்றை வரைந்துள்ளார். பெண்ணின் உருவம் கொண்ட அந்த டாட்டூவுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை அவர் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.
ஓவியம் போன்று காணப்படும் அந்த டாட்டூவை பார்த்து ரசிகர்கள் பலரும் பகிர்ந்து வருகிறார்கள்.