இயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “கடவுள் இருக்கான் குமாரு.”
இதில் நிக்கி கல்ராணி , ஆனந்தி ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர். ஆர்.ஜே.பாலாஜி ஜி.வி.பிரகாஷ் குமாரின் நண்பனாக நகைச்சுவை கலந்த முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
“வழக்கமாக என்னுடைய படத்தில் இடம் பெறும் டாஸ்மாக் காட்சிகள் ஏதும் இப்படத்தில் இருக்காது. என்னுடைய முந்தைய படங்களை போல் இப்படமும் யு சான்றிதழ் படமாக இருக்கும். படத்தின் போஸ்ட் ப்ரொடெக்ஷன் பணி மிக வேகமாக நடந்து வருகிறது” என்றார் இயக்குநர் ராஜேஷ்.