தல அஜீத் தனது குடும்பத்திற்கு அடுத்த படியாக நேசிப்பது கார்கள் மற்றும் பைக் தான். தொழில்முறை ரேஸரான அவருக்கு தெரியாமல் எந்த காரும் இருக்கப்போவதில்லை.
அதே போல் ரோல்ஸ்ராய்ஸ் காரில் ஏறினால் மின்னல் வேகத்தில் கார் ஒட்டி பார்பவர்களை மிரள வைப்பார். தற்போது கார் ரேஸ்களில் கலந்து கொள்ளாமல் நடிப்பதில் தீவிரம் காட்டி வரும் அவருக்கு கார்கள் மீதான காதல் கொஞ்சம் கூட குறையவில்லை.
தற்போது வந்துள்ள தகவல்படி, தல அஜித் விரைவில் ஒரு புதிய லம்பாகினி காரை 3 முதல் 4 கோடி ரூபாய் வரை கொடுத்து வாங்கவுள்ளதாக கூறப்படுகிறது.