இந்தியாவில் நோக்கியா 3, நோக்கியா 5 மற்றும் நோக்கியா 6 ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து எச்எம்டி குளோபல் புதிய ஸ்மார்ட்போன்களை தயாரித்து வருகிறது.
அந்த வரையில் அந்த நிறுவனத்தின் நோக்கியா 2 சார்ந்த தகவல்கள் இணையத்தில் சகசிந்துள்ளது.
நோக்கியா 2 ஸ்கெட்ச் படங்கள் சீனாவின் பெய்டு தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தற்சமயம் வெளியிடப்பட்டுள்ள நோக்கியா 3 ஸ்மார்ட்போனுடன் புதிய நோக்கியா 2 இடம்பெற்றுள்ளது.
புதிய தகவல்களின் படி புதிய நோக்கியா 2 ஏற்கனவே வெளியிடப்பட்ட நோக்கியா 3-யை விட சிறியதாக இருக்கிறது.
சில தகவல்களில் புதிய நோக்கியா 2 பழைய நோக்கியா லூமியா 620 போன்று காட்சியளிக்கும் என கூறப்படுகிறது. நோக்கியா லூமியா 620 2013-ம் ஆண்டு வெளியிடப்பட்டது.
ஆண்ட்ராய்டு ஹெட்லைன்ஸ் வெளியிட்டுள்ள தகவல்களின் படி நோக்கியா 2 எச்எம்டி குளோபல் நிறுவனத்தின் மலிவு விலை ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனாக இருக்கும் என கூறப்படுகிறது.
முன்னதாக வெளியான தகவல்களில் நோக்கியா 2 ஸ்மார்ட்போனில் 1.1 ஜிகாஹெர்ட்ஸ் நான்கு ARM கார்டெக்ஸ்-A7 சிபியு கொண்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 210 சிப்செட், அட்ரினோ 304 கிராஃபிக்ஸ் வழங்கப்படும் என கூறப்பட்டது.
தற்சமயம் வெளியாகியுள்ள ஸ்கெட்ச் படங்களில் நோக்கியா 2 பார்க்க நோக்கியா 3 அளவு கொண்ட டிஸ்ப்ளேவினை கொண்டிருக்கும் என்றே தெரிகிறது.
நோக்கியா 3 ஸ்மார்ட்போனில் 5.0 இன்ச் ஐ.பி.எஸ். எல்சிடி ஸ்கிரீன் மற்றும் 1280×720 பிக்சல் ரெசல்யூஷன் கொண்டுள்ளது.