சினிமாவில் ஆர்வம் காட்டி வந்த நடிகர்கள் சிலபேர் இப்போது அரசியலில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் ரஜினி அரசியலுக்கு வருவது குறித்தும், அவருடைய கட்சி குறித்தும் நிறைய பேச்சுகள் வருகிறது.
இந்த நிலையில் ஒரு பேட்டியில் ரஜினி அரசியல் குறித்து காமெடி நடிகர் செந்தில் அவர்கள் பேசும்போது, ரஜினி அரசியலுக்கு கண்டிப்பாக வரனும். இந்த முறை கண்டிப்பாக வருவார் என்ற நம்பிக்கை இருக்கிறது.
அவர் கட்சி ஆரம்பித்தால் முதல் ஆளாக நான் அவருடன் இணைவேன் என்று கூறியுள்ளார்.