ஜெயம் ரவியுடன் ஜெயம் படம் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை சதா. பின் விக்ரமுடன் அந்நியன், வினய்யுடன் உன்னாலே உன்னாலே, அஜித்துடன் திருப்பதி என இவர் நடித்த படங்கள் ஹைலைட்டாக இருந்தது.
தமிழ், தெலுங்கு என படங்களில் நடித்து வந்தாலும் பின் இவருக்கு தமிழில் மார்க்கெட் இல்லாமல் போனது. கடைசியாக வடிவேலுவுடன் எலி படத்தில் நடித்திருந்தார். சில டிவி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் வந்தார்.
சினிமாவில் மீண்டும் தன் மார்க்கெட் உயர வேண்டும் என்பதற்காக சமீபத்தில் ஒரு பெயரியல் நிபுணர் ஒருவரை சந்தித்து தன் பெயரை மாற்றிக்கொண்டாராம். இனி அவரின் பெயர் சதா செய்யது என்பது தானாம்.
இவருடைய அப்பா மகாராஸ்டிரா இஸ்லாம் மதத்தை சேர்ந்த டாக்டர், அம்மா வங்கியில் வேலை செய்கிறாராம்.