தமிழகத்தில் கோடை தீவிரமடையும் போது நட்சத்திரங்கள் குளிர் பிரதேசத்துக்கு பறந்துவிடுவார்கள். நேரம் பார்த்து காய் நகர்த்தாதவர்கள் மட்டும் சென்னையில் படப்பிடிப்பு என்று வெயிலில் காய்ந்து கொண்டிருப்பார்கள்.
மாஸ், 24 படங்களால் கோடையில் உள்ளூரில் இருக்கும்படியானது சூர்யாவுக்கு. இப்போது சிறிது ஓய்வு கிடைக்கவே குடும்பத்துடன் பறந்துவிட்டார் மாலத்தீவுக்கு.
மாஸ் சுமாராகப் போனாலும் சூர்யா தயாரித்த 36 வயதினிலே ஹிட்டானது. ஜோதிகாவின் ரீ என்ட்ரியும் கம்பீரமாக அமைந்தது. மாலத்தீவில் அந்த வெற்றியையும் சேர்த்துதான் கொண்டாடுகிறது இந்த நட்சத்திர ஜோடி.