‘மிஷன் இம்பாசிபிள்’ புகழ் நடிகர் டாம் குரூஸ் தனது மூன்றாவது மனைவி நடிகை கேட்டி ஹோல்ம்ஸ் என்பவரை கடந்த 2012 – ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். டாம், கேட்டியை விவாகரத்து செய்த பின் தொடர்ச்சியாக பல படங்களில் நடித்துக்கொண்டே வருகிறார்.
வேலை பலுவால் சிக்கித் தவித்த டாம் குருஸை காப்பாற்றும் விதமாக இங்கிலாந்தைச் சேர்ந்த எமிலி தாமஸ் (22) என்ற பெண் கடந்த ஆண்டு இவருக்கு உதவியாளராக சேர்ந்தார். தொடர்ந்து படங்களில் நடித்து வரும் அவருக்கு நல்ல உதவியாளராக இருந்த எமிலி, ஒருகட்டத்தில் தோழியாக மாறினார்.
இந்நிலையில், சினிமாக்களுக்கு இடையே தன்னை பற்றி யோசிக்கத் தொடங்கிய டாம் குரூஸ் தற்போது எமிலியை திருமணம் செய்யப் போவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எமிலி, டாம் குரூஸின் முன்னால் மனைவி கேட்டியை நினைவுபடுத்தும் வகையில் இருப்பதாலேயே அவர்களுக்குள் இந்த பிணைப்பு ஏற்பட காரணம் எனவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.