‘தெறி´, ´மெர்சல்´ படங்களுக்கு பிறகு விஜய் – அட்லி கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம் ´தளபதி 63´. இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை 21 ஆம் திகதி மாலை 6 மணிக்கும், இரண்டாவது லுக் போஸ்டரை 21 ஆம் திகதி நள்ளிரவு 12 மணிக்கும் வெளியிட இருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா அறிவித்துள்ளார்.
இது ரசிகர்களுக்கு இரட்டை விருந்தாக அமைய இருக்கிறது.