பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மனங்களில் பெரிதும் ஈர்த்தவர் தர்ஷன். 50 நாட்களில் அவருக்கு தான் பிக்பாஸ் டைட்டில் கிடைக்கும் என அனைவரும் கூறிவந்தனர்.
95 நாட்களை கடந்து அவர் இருந்த பின்னும் கடைசியில் அவருக்கு டைட்டில் கொடுக்காதது அவரது ரசிகர்களுக்கு வருத்ததமே. ஆனால் தர்ஷனுக்கோ தன் நண்பன் முகென் டைட்டில் வென்றது மிகவும் மகிழ்ச்சி. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் கமலுடன் அவருக்கு இந்தியன் 2 படத்திலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
இலங்கையை சேர்ந்தவர் பிக்பாஸ்க்கு பின் தாய் நாட்டுக்கு இன்னும் வரவில்லை என அங்குள்ள ரசிகர்கள் மிகவும் ஏக்கத்துடன் இருந்தனர். இது குறித்து அவரிடன் Chatல் பலரும் கேள்விகள் கேட்டனராம்.
இந்நிலையில் தர்ஷன் தற்போது முன் கூட்டிய Commitments அதிகமாக இருந்ததால் என்னால் உடனே இலங்கை வரவில்லை. நாளை இலங்கையில் இருப்பேன். ரசிகர்களை சந்திக்கப்போகிறேன் என வீடியோ வெளியிட்டுள்ளார்.
இதனால் ரசிகர்கள் மிகவும் சந்தோசத்தில் இருக்கிறார்கள்.