தமிழ் சினிமாவில் என்றும் தரமான படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கும். அந்த வகையில் பிகிலுடன் தைரியமாக கைதியை ரிலிஸ் செய்தனர்.
பலரும் இந்த படம் பிகில் புயலுக்கு தாங்காத என்று சொன்னார்கள், ஆனால், பிகிலுக்கு இணையாக கைதி போட்டிப்போட்டு வருகின்றது.
கைதி ஒரு வார முடிவில் தமிழகம் முழுவதும் ரூ 20 கோடி வசூலை கடந்துள்ளது, இன்னும் ரூ 5 கோடி வசூல் செய்தாலே போதும், கைதி லாபத்தை எட்டிவிடும்.
அதே நேரத்தில் முதல் வாரத்தை விட கைதி இரண்டாவது வாரம் அதிக திரையரங்குகள் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.