நடிகர் விஜய் சேதுபதி ஒரு ஆன்லைன் விற்பனை மொபைல் ஆப் விளம்பரத்தில் நடித்திருந்தார். அதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து சில்லறை வணிகர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் இன்று விஜய் சேதுபதி அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தியுள்ளனர். சென்னை வளரசரவாக்கம் பகுதியில் உள்ள விஜய் சேதுபதியின் அலுவலகத்திற்கு முன்பு போராட்டம் நடத்த அவர்கள் பேரணியாக சாலையில் கோஷங்கள் எழுப்பிக்கொண்டு சென்றனர்.
அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்துள்ளனர்.