நடிகர் பரத் தற்போது சினிமாவில் ஹிட் கொடுக்க போராடி வருகிறார். அவர் நடிப்பில் கடைசியாக வந்த பொட்டு படம் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. பாய்ஸ், காதல், வெயில் என நல்ல முறையில் துவங்கிய அவரது கேரியரில் தற்போது பெரிய ஹிட் தேவைப்படுகிறது.
இந்நிலையில் பரத் தற்போது ஒரு பாலிவுட் படத்தில் முக்கிய ரோலில் நடிக்கிறார். விமானத்தில் மும்பை செல்லும் போட்டோவை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார் பரத்.
தற்போது இரண்டு மலையாள படங்களில் நடித்து வரும் அவர், இனி கதைகள் தேர்ந்தெடுப்பதில் எந்த அவசரமும் காட்டாமல் தனக்கு செட் ஆகும் என தெரிந்தால் மட்டுமே ஒப்புக்கொள்கிறாராம்.