பிக்பாஸ் நிகழ்ச்சி பட்டித்தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பும் ப்ரோகிராம். இதற்கு என்று மிகப்பெரிய ஆடியன்ஸ் இருக்கின்றனர்.
அந்த வகையில் கடந்த சீசன் செம்ம சர்ச்சை, காதல், மோதல் என சூப்பராக சென்றது, தற்போது 4வது சீசனுக்கான நேரம்.
இதற்காக நடிகைகள் சுனைனா, அமிர்தா, அதுல்யா, ரம்யா பாண்டியனிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம்.
அதே போல் குக் வித் கோமாளி புகழ், நடிகை கிரண், பூனம் பாஜ்வா ஆகியோரிடமும் பேசி வருவதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது.
அதோடு டிக்டாக் பிரபலம், வடசென்னை படத்தில் தனுஷின் மச்சனாக நடித்தவர் என சில இளைஞர்களிடம் பேச்சு வார்த்தை செல்வதாக கூறப்படுகிறது.