ஹாலிவுட்டின் பழம்பெரும் நடிகை ஒலிவியா டி ஹவில்லேண்ட் 104 வயதில் காலமாகியுள்ளார்.
அவருடைய மறைவை செய்தித்தொடர்பாளர் லிசா அறிவித்துள்ளார். பாரிஸில் உள்ள தனது வீட்டில் தூக்கத்திலேயே அவருடைய உயிர் பிரிந்துள்ளது.
1935 முதல் 1979 வரை திரையுலகில் தொடர்ந்து நடித்து வந்தார் ஒலிவியா. 49 படங்களில் நடித்த ஒலிவியா, டூ ஈச் ஹிஸ் ஓன் மற்றும் தி ஹியர்ரெஸ் ஆகிய படங்களுக்காக சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளார். கடைசியாக 2009-ல் நடித்தார். 1966 முதல் 1988 வரை தொலைக்காட்சித் தொடர்களில் நடித்தார். எர்ரோல் ஃபிளின்னும் ஒலிவியாவும் 8 படங்களில் ஜோடியாக நடித்து சிறந்த திரை ஜோடிகளாகப் பெயர் பெற்றார்கள்.
ஒலிவியாவின் மறைவுக்கு ஹாலிவுட் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.