சென்னையில் திங்கள்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.128 குறைந்து, ரூ.37,088 க்கு விற்பனை செய்யப்பட்டது.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.43,000 ஐ தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. அதன்பிறகு, தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது.இந்நிலையில், திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.128 குறைந்து, ரூ.37,088 க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ரூ.16 குறைந்து, ரூ.4,636 ஆக இருந்தது.
வெள்ளி கிராமுக்கு 90 பைசா குறைந்து, ரூ.66.60 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.900 குறைந்து, ரூ.66, 600 ஆகவும் இருந்தது.
திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி.தனி)
1 கிராம் தங்கம்……………………….. 4,636
1 பவுன் தங்கம்………………………….37,088
1 கிராம் வெள்ளி………………………..66.60
1 கிலோ வெள்ளி………………………..66,600
சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி.தனி)
1 கிராம் தங்கம்……………………….. 4,652
1 பவுன் தங்கம்………………………….37,216
1 கிராம் வெள்ளி………………………..67.50
1 கிலோ வெள்ளி………………………..67,500