இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இருந்து ஆஸி. வீரர் அபாட் விலகியுள்ளார். இதை அடுத்து ஹென்றிகஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அவுஸ்திரேலியாவுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்களில் விளையாடுகிறது. அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 1-2 எனத் தோற்றது இந்திய அணி. எனினும் டி20 தொடரை 2-1 என வென்றது.
டிசம்பர் 17 முதல் டெஸ்ட் தொடர் தொடங்குகிறது.
காயம் காரணமாக டேவிட் வார்னர் முதல் டெஸ்டிலிருந்து விலகினார். பிறகு மற்றொரு தொடக்க வீரருமான வில் புகோவ்ஸ்கியும் விலகினார்.
இந்தியன்ஸ் அணிக்கு எதிரான 2 வது பயிற்சி ஆட்டத்தில் அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் அபாட்டுக்குக் காயம் ஏற்பட்டது. இதை அடுத்து இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டிலிருந்து அவர் விலகியுள்ளார். தற்போது, அவுஸ்திரேலிய அணியில் ஹென்றிகஸ் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளார்.