பொதுமக்களின் வாழ்வு மேம்பட வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகை குறித்து தவறான தகவல்களை பரப்பும் நடிகர் கமல்ஹாசனை மக்கள் நிராகரிப்பார்கள் என மின் துறை அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்தார்.
நாமக்கல்லில் திங்கள்கிழமை பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தை தொடங்கி வைத்த பின், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கோவையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற கூட்டத்தில் கேள்வி கேட்ட பெண்ணை அநாகரிகமான முறையில் வெளியேற்றி திமுகவினர் தாக்கிய விவகாரத்தில் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
கொரோனா காலத்தில் பொதுமக்களின் வாழ்வு மேம்பட வேண்டும் என்ற நோக்கில் ரு. 2,500 பணம், பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதனைக் குறை கூறும் நடிகர் கமல்ஹாசனை மக்கள் நிராகரிப்பார்கள் என்றார்.