தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபாடா, டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக தென் ஆப்பிரிக்க அணி 14 வருடங்கள் கழித்து பாகிஸ்தானுக்கு வந்துள்ளது. அந்த அணிக்கு குவிண்டன் டி காக் தலைமையேற்றுள்ளாா்.
கராச்சியில் இரு அணிகளுக்கு இடையே நடைபெறும் முதல் டெஸ்டில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 220 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்பிறகு விளையாடிய பாகிஸ்தான் அணி இன்று 378 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபாடா 3 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.
இதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனைப் பட்டியலில் ரபாடா இணைந்துள்ளார். குறைந்த வயதில் மற்றும் குறைந்த பந்துகளில் 200 டெஸ்ட் விக்கெட்டுகளை எடுத்த வீரர்களின் பட்டியலில் ரபாடவுக்கும் ஓர் இடம் கிடைத்துள்ளது. தற்போதைய வேகப்பந்து வீச்சாளர்களில் ரபாடா எந்தளவுக்குச் சாதித்து வருகிறார் என்பதை இந்தப் பட்டியல் வெளிப்படுத்துகிறது.
குறைந்த வயதில் 200 டெஸ்ட் விக்கெட்டுகள்
வக்கார் யூனுஸ் – 38 டெஸ்டுகள் – 24 வருடம் 26 நாள்கள்
கபில் தேவ் – 50 டெஸ்டுகள் – 24 வருடம் 68 நாள்கள்
ஹர்பஜன் சிங் – 46 டெஸ்டுகள் – 25 வருடம் 74 நாள்கள்
ரபாடா – 44 டெஸ்டுகள் – 25 வருடம் 248 நாள்கள்
குறைந்த பந்துகளில் 200 டெஸ்ட் விக்கெட்டுகள்
வக்கார் யூனுஸ் – 7730 பந்துகள்
டேல் ஸ்டெய்ன் – 7848 பந்துகள்
ரபாடா – 8154 பந்துகள்