நடிகர் சூர்யாவின் அடுத்த படத்தில் அவருக்கு ஜோடியாக சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் நாயகி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
சூரரைப் போற்று படத்துக்குப் பிறகு, பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க சூர்யா ஒப்பந்தமாகியுள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது.
இது சூர்யா நடிப்பில் உருவாகும் 40 வது படம் என்பதால் இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை சூர்யா 40 என தற்போது அழைத்து வருகிறார்கள்.
பிரபல இசையமைப்பாளர் இமான் இந்தப் படத்திற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் கடந்த ஞாயிறன்று அறிவித்துள்ளது. அன்று (ஜனவரி 24) இமானின் பிறந்த நாள் என்பதால் அதனை முன்னிட்டு இந்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. இவர்கள் இருவரும் இணைவது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நடிகர் சூர்யாவின் அடுத்த படத்தில் அவருக்கு ஜோடியாக சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் நாயகி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
தற்போது இந்தப்படத்திற்கு படப்பிடிப்புக்கான இடங்கள் தேர்வு, நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு என படக்குழு தீவிரமாகப் பணிபுரிந்து வருகிறது படக்குழு. தற்போது இதன் நாயகியாக பிரியங்கா அருள் மோகன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இந்தப் படத்துக்கு முன்னதாக டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு நாயகியாக நடித்துள்ளார். அந்தப் படம் இன்னும் வெளியாவதற்குள் சூர்யாவுக்கு நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.