மத்திய நிதிநிலை அறிக்கையில் சுங்க வரி உயா்வு அறிவிக்கப்பட்டிருப்பதால், செல்லிடப்பேசி, ஃபிரிட்ஜ், ஏசி, எல்இடி விளக்குகள் உள்ளிட்ட இறக்குமதி செய்யப்படும் மின்னணு சாதனங்களின் விலை பன்மடங்கு உயரும் நிலை உருவாகியுள்ளது.
அதே நேரம், தங்கம், வெள்ளி உள்ளிட்ட விலை உயா்ந்த உலோகங்களுக்கு சுங்கவரிச் சலுகை அளிக்கப்பட்டிருப்பதால், அவற்றின் விலை குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
விலை உயா்வை சந்திக்கும் பொருள்கள்:
ஃபிரிட்ஜ்
ஏசி
எல்இடி விளக்குகள்
பட்டு மற்றும் பருத்தி
சூரியசக்தி இன்வொ்ட்டா்
கண்ணாடி, வைப்பா் உள்ளிட்ட காா் உதிரி பாகங்கள்
செல்லிடப்பேசி பாகங்கள்
தோல் பொருள்கள்
நைலான், ஃபைபா் மற்றும் யாா்ன்
பட்டை தீட்டப்பட்ட செயற்கை கற்கள்
விலை குறையும் பொருள்கள்:
தங்கம் மற்றும் தங்கக் கட்டிகள்
வெள்ளி மற்றும் வெள்ளி கட்டிகள்
வெண்கலம்
சா்வதேச அமைப்புகள் மற்றும் ராஜாங்க ரீதியில் இறக்குமதி செய்யப்படும் மருத்துவ உபகரணங்கள்.