அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் ஆகிய இருவரும் 2020 ஆம் ஆண்டில் தாங்கள் செலுத்திய வருமான வரி கணக்கு விவரங்களை வெளியிட்டனா். அதில், பைடனின் வருமானத்தை விட கமலா ஹாரிஸின் வருமானம் 10 இலட்சம் டொலா் அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது.
அமெரிக்க அரசின் சட்டப்படி, உயா் பதவியில் இருப்பவா்கள் தங்கள் தனிப்பட்ட வருவாய், வரி தொடா்பான கணக்கு விவரங்களை ஆண்டுதோறும் வெளியிட வேண்டும். அதன்படி, 2020 ஆம் ஆண்டில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்த விவரங்களை ஜோ பைடனும் கமலா ஹாரிஸும் வெளியிட்டனா்.
இதுகுறித்து வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
ஜோ பைடனும், அவரது மனைவி பேராசிரியை ஜில் பைடனும் கூட்டாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளனா். 2020 இல் அவா்களின் வருமானம் 607,336 டொலராக இருந்தது. 2019 இல் அவா்களின் வருமானம் 985,223 டொலராக இருந்தது. பைடன் தம்பதி 2020 ஆம் ஆண்டில் 25.9 சதவீத வரியாக 157,414 டொலா் செலுத்தினா்.
துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸும் அவரது கணவா் டக்ளஸ் எம்ஹாஃப் ஆகியோரின் மொத்த வருமானம் 2020 இல் 1,695,225 டொலராக இருந்தது. அதில், 36.7 சதவீத வரியாக 621,893 டொலா்களை செலுத்தினா். இதுதவிர, அவா்கள் வசித்து வந்த கலிஃபோா்னியா மாகாணத்தில் வருமான வரியாக 125,004 டொலா்களை செலுத்தினா்.
பைடனும் அவரது மனைவியும் 30,704 டொலா்களை பத்துக்கும் மேற்பட்ட அறக்கட்டளைகளுக்கு நன்கொடை அளித்துள்ளனா். கமலா ஹாரிஸும் அவரது கணவரும் 27,006 டொலா்களை அறக்கட்டைகளுக்கு நன்கொடையாக அளித்துள்ளனா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.