தமிழ், தெலுங்கு திரையுலகில் பிசியான நடிகராக வலம் வருபவர் நடிகர் சமுத்திரக்கனி.
இவர் கைவசம் தற்போது ஆர்.ஆர்.ஆர், இந்தியன் 2, தலைவி, எம்.ஜி.ஆர் மகன், அந்தகன், டான், ரைட்டர் என ஏராளமான படங்கள் உள்ளன.
இந்நிலையில், அவர் நடிக்கும் மற்றொரு தமிழ் படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்துக்கு ´யாவரும் வல்லவரே´ என பெயரிபடப்பட்டுள்ளது.
அறிமுக இயக்குனர் என்.ஏ.ராஜேந்திர சக்ரவர்த்தி இயக்கியுள்ள இப்படம், நான்கு வெவ்வேறு கதைகளை இணைத்து சொல்லும் வித்தியாசமான படமாக இது உருவாகியுள்ளது.
இப்படத்தில் சமுத்திரக்கனிக்கு ஜோடியாக பிக்பாஸ் பிரபலம் நடிகை ரித்விகா நடித்துள்ளார்.
மேலும் யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.