ஆபாச படங்களை பார்ப்பது திருமணமாகாத ஆண்களுக்கு உதவிகரமாக அமையும் என்ற கருத்தை வெளியிட்டிருந்த எகிப்திய தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி தொகுப்பாளினியான நடிகை ஒருவருக்கு கடுமையான எதிர்ப்பு வலுத்துவருகின்றது.
என்டிஸ்ஸார் (Entissar) என்ற அந்த நடிகைக்கு எதிராக அரசாங்க ஆதரவுக் குழு ஒன்று முறைப்பாடு செய்துள்ளது.
வரம்புமீறிய ஒழுக்கக்கேட்டை அந்த நடிகை தூண்டியுள்ளதாக எகிப்தின் தலைமை அரசதரப்பு வழக்குரைஞர் கூறியிருக்கிறார்.
ஆபாச இணைய தளங்களையும் தொலைக்காட்சிகளையும் தடைசெய்வதற்கு எதிராக என்டிஸ்ஸார் கருத்து வெளியிட்டார்.
கடுமையான செலவு காரணமாக திருமணம் செய்யமுடியாதுள்ள இளம் ஆண்களுக்கு ஆபாச இணையதளங்கள் உதவுவதாக பேசியதன்மூலம் என்டிஸ்ஸார் சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
எகிப்தில், பாலியல் விவகாரங்களை பொது இடங்களில் பேசுவது என்பது சர்சசைக்குரியதாகவே இருந்துவருகின்றது.