புது பொலிவுடன் பிக் பாஸ் Ultimate நிகழ்ச்சி நாளை முதல் தொடங்கவுள்ளது. 24 மணிநேரமும் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகவுள்ள அந்த நிகழ்ச்சியை காண ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.
இந்நிலையில் இதுவரை இதில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் குறித்து தினமும் அறிவித்து இருந்தனர்.
அதன்படி இதுவரை 7 போட்டியாளர்களை அறிவித்துள்ளனர். மேலும் நாளை மீதம் உள்ள போட்டியாளர் யார் யார் என்பது தெரிந்துவிடும்.
இதனிடையே தற்போது பிக் பாஸ் Ultimate நிகழ்ச்சியின் செட்டில் கமல் நின்று தொகுத்து வழங்கும் புதிய ப்ரோமோவை வெளியிட்டுள்ளனர்.