திராவிட முன்னேற்ற கழகத்தை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் என்.ஆர். இளங்கோவின் மகன் வீதி விபத்தில் இன்று பலியானார்.
என்.ஆர்.இளங்கோவின் மகன் ராகேஷ் (வயது 22) புதுச்சேரியிலிருந்து இன்று சென்னை திரும்பியபோது, விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அருகே சாலை தடுப்பின் மீது மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அவருடன் காரில் சென்ற நபர் பலத்த காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.