இசை ரசிகர்கள் அனைவரும் எதிர்ப்பார்த்த தள்ளிப்போகாதே பாடல் வெளிவந்து விட்டது. இப்பாடல் இன்று மாலை 7 மணியளவில் வருவதாக கூறப்பட்டது.
ஆனால், யாரோ பாடலை லீக் செய்ய, படக்குழுவே அதிகாரப்பூர்வமாக 5 மணிக்கே வெளியிட்டு விட்டது.
இப்பாடல் வெளிவந்த ஒரு மணி நேரத்தில் 11,000 பார்வையாளர்களை கடந்துள்ளது. இது மட்டுமின்றி 3610 லைக்ஸுகளையும் பெற்றுள்ளது. மேலும், இப்பாடல் யு-டியுபில் பல சாதனைகள் படைக்க காத்திருக்கின்றது.