சமீப காலமாக டுவிட்டர் என்னும் இணையதளம் சினிமா பிரபலங்கள் மற்றும் சாதாரண மக்களிடையே பிரபலமாகி வருகிறது. இந்த டுவிட்டரில் சினிமா பிரபலங்கள் தாங்கள் நடிக்கும் படத்தை பற்றியும், முக்கிய நிகழ்வுகள் பற்றியும் ரசிகர்களிடையே பகிர்ந்து வருகிறார்கள்.
சமீபத்தில் கமல்ஹாசனும் டுவிட்டரில் இணைந்தார். இதன் மூலம் ரசிகர்கள் கேட்டும் கேள்விகள், வாழ்த்துக்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை பகிர்ந்து வந்தார். இந்நிலையில், திடீரென டுவிட்டர் பக்கம் தன்னால் வரமுடியாது என்று கூறியிருக்கிறார்.
தன்னுடைய அடுத்த படத்தின் பணிகளை இன்று முதல் ஆரம்பிக்கவுள்ளதாகவும், அதன் காரணமாக தன்னால் அடிக்கடி டுவீட் செய்ய முடியாது என்றும் தெரிவித்திருக்கிறார். இருப்பினும் ரசிகர்களின் டுவிட்டுக்களை அவ்வப்போது நேரம் கிடைக்கும் போது பார்ப்பேன் என்று கூறியுள்ளார்.
கமல்ஹாசனின் அடுத்த படத்தை பிரபல மலையாள இயக்குனர் ராஜீவ் குமார் இயக்கவுள்ளதாகவும், இந்த படத்தில் கமலுடன் அவருடைய மகள் ஸ்ருதிஹாசனும் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.