ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என தொடர் விவாதங்கள் நடந்து வருகிறது. சிலர் ஆதரவு தெரிவித்தும், சிலர் எதிர்ப்பு காட்டியும் வருகிறார்கள்.
நேற்று மாலை சௌந்தர்யா ரஜினி இயக்கும் விஐபி 2 படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. சிறப்பாக நடைபெற்ற இவ்விழாவில் தனுஷ், லதா ரஜினிகாந்த், கஜோல் ஆகியோர் கலந்துகொண்டனர்.
ரஜினி அரசியலுக்கு வருவாரா? என்ற கேள்விக்கு அவரின் குடும்பத்தார் கூறிய பதில்கள்.
லதா ரஜினிகாந்த்
மும்பையில் படப்பிடிப்பில் ரஜினி சார் கலந்து கொண்டு இருக்கிறார். இங்கு நாங்கள் சினிமா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்துள்ளோம் என்று சொல்லிவிட்டு, ரஜினி அரசியலுக்கு வருவாரா? என்ற கேள்விக்கு பதில் அளிக்க மறுத்துவிட்டார்.
தனுஷ்
எந்த முடிவாக இருந்தாலும் அவர் சரியான நேரத்தில், சரியாக எடுப்பார். அவர் வருவாரா? வரமாட்டாரே என என்னால் சொல்ல முடியாது.
சௌந்தர்யா ரஜினி
எல்லா விசயங்களையும் வீட்டில் நாங்கள் பேசிக்கொள்வோம். ஆனால் அவர் அரசியலுக்கு வருவது பற்றி கருத்து சொல்ல எனக்கு வயது போதாது.