அட்லீ-விஜய் கூட்டணியில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள பிகில் படத்தின் ட்ரைலர் சமீபத்தி வெளிவந்தது. அதை பார்த்து ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் அதிகம் பாராட்டி ட்விட்டரில் பதிவிட்டிருந்தனர். பாலிவுட் நடிகர் ஷாருக்கான் பேசும்போது ´Chak de on steroids´ என கூறியிருந்தார்.
இந்நிலையை பிகில் ட்ரைலரில் வரும் ஒரு காட்சி சக் தே படத்தை போலவே இருக்கிறது என வீடியோ பரவியது. அதனால் சக்தே படத்தின் ரீமேக் உரிமையை வாங்கி தான் பிகில் படம் எடுக்கின்றனர் என செய்திகள் பரவியது. மேலும் ஒரு தரப்பினர் ட்ரைலரை மோசமாக ட்ரோல் செய்தும் வருகின்றனர்.
இந்நிலையில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஒரு தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் “சக் தே படத்தின் ரீமேக் உரிமையை நாங்கள் வாங்கவில்லை. அப்படி வந்த செய்தி வதந்தி” என கூறியுள்ளார்.