தெற்கு பசிபிக் கடல் பகுதியில் வியாழக்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் மிதமான சுனாமி ஏற்பட்டது.
நியூஸிலாந்துக்கு 1,800 கி.மீ. தொலைவில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட அந்த நிலடுக்கம், ரிக்டா் அளவுகோலில் 7.7 அலகுகளாகப் பதிவானது.
இதை அடுத்து, நியூஸிலாந்து உள்ளிட்ட பகுதிகளில் சுனாமி அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. எனினும், நிலநடுக்கம் காரணமாக மிதமான சுனாமியே ஏற்பட்டதால் அந்த எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டது.