ரஜினி நடிப்பில் உருவாகவுள்ள புதிய படம் ‘கபாலி’. இப்படத்தை அட்டக்கத்தி பா.ரஞ்சித் இயக்கவுள்ளார். ராதிகா ஆப்தே, தன்ஷிகா, பிரகாஷ் ராஜ், அட்டக்கத்தி தினேஷ், கலையரசன் உள்ளிட்டோர் நடிக்கவுள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற செப்டம்பர் 17-ந் தேதி முதல் தொடங்கவிருக்கிறது. இந்நிலையில், இப்படத்தில் ரஜினியின் தோற்றம் எப்படியிருக்கும் என்பதை ரசிகர்கள் தங்கள் யூகங்களை வைத்து பல்வேறு போஸ்டர்களை வெளியிட்டனர்.
அதேபோல், சமீபத்தில் இப்படத்தின் போட்டோ ஷுட்டின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றும் வெளியாகி பரபரப்பை கிளப்பியது. இந்நிலையில், நேற்று ஜோக்கர் வேடத்தில் ரஜினியைப் போன்று உருவ ஒற்றுமை கொண்ட ஒரு புகைப்படம் வெளியாகி பரபரப்பை கிளப்பியது.
இந்த புகைப்படம் ‘கபாலி’ படத்தில் ரஜினியின் தோற்றம் என்று அனைவரும் நம்பினார். ஆனால், இயக்குனர் ரஞ்சித் இதை மறுத்துள்ளார். இந்த புகைப்படத்தில் இருப்பர் நடிகரும், டிவி தொகுப்பாளருமான மா.கா.பா.ஆனந்தின் புகைப்படம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘கபாலி’ படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் 17-ந் திகதி தொடங்கவுள்ள நிலையில், அன்றைய தேதியில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். உள்நாடு, வெளிநாடுகளிலும் இப்படத்தின் படப்பிடிப்பை நடத்தவுள்ளனர்.