நடிகர் சங்கத்தால் ரஜினி–கமல் மோதல்!

By On · no Comments · In

நடிகர் சங்க தேர்தலில் ரஜினி–கமல் ஆகிய இருவரின் ஆதரவு யாருக்கு? என்கிற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில் 2 பேருமே மவுனம் காத்து வந்தனர். ஒரு கட்டத்தில் விஷால் அணிக்கு கமல் ஆதரவு தெரிவித்தார்.

 
இதையடுத்து கமல்தான் விஷால் அணியை தூண்டி விடுவதாக பரபரப்பான குற்றச்சாட்டுகளும் வைக்கப்பட்டன.

 
இந்நிலையில் தென் இந்திய ‘‘நடிகர் சங்கத்தின் பெயரை தமிழ் நடிகர்கள் சங்கம் என்று மாற்ற வேண்டும் என்று பல தரப்பில் இருந்தும் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. நடிகர் சங்க தேர்தல் தொடர்பாக வெளிப்படையாக எந்த கருத்தையும் தெரிவிக்காமலேயே இருந்து வந்த ரஜினியும், கமலும் இன்று மனம் திறந்து பேட்டி அளித்துள்ளனர்.

 
நடிகர் சங்க பெயரை தமிழ் நடிகர் சங்கம் என்று பெயர் மாற்ற வேண்டும் என ரஜினிகாந்த் கூறியிருக்கும் நிலையில், அதற்கு நேர் எதிரான கருத்தை கமல் பதிவு செய்துள்ளார். நடிகர் சங்கத்தின் பெயரை இந்திய நடிகர் சங்கம் என்று மாற்ற வேண்டும் என்று கமல் கூறியிருப்பது திரையுலகில் மட்டுமின்றி ரஜினி–கமல் ரசிகர்கள் இடையேயும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 
ரஜினிகாந்துக்கும், கமலஹாசனுக்கும் இடையேயான கருத்து மோதலாகவே திரையுலக பிரமுகர்களால் இந்த விவகாரம் பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

0 %
Tweet This