டோடோ பறவை நானூறு வருடங்களுக்கு முன்பாக அழிந்து போய்விட்டது. குட்டி டோடோ என்று அழைக்கப்படும் அதன் வகையை ஒத்த இன்னுமொரு பறவை இன்னமும் இருக்கிறது. ஆனால், அதுவும் அருகிவருவதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். சமோ நாட்டின் தேசிய பறவையான இதன் பெயர் மனுமேயா.